tamilnadu

img

கோவையில் 144 தடையால் வேலையின்றி தவித்த வட மாநில இளைஞர்கள் போராட்டம்

கோவையில் பல்வேறு இடங்களில் கட்டிட வேலைகளுக்காக மேற்கு வங்கம், உத்திரபிரதேசம்  உட்பட பல்வேறு வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதால் இந்த வட மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வேலையும் இல்லாததால் போதிய வருமானம் இன்றி தவித்து  வருகின்றனர். இவர்களை வேலைக்கு அழைத்து செல்லும் புரோக்கர்களும்  இவர்களை கண்டு கொள்ளாததால் சாப்பாட்டுக்கு  வழி இன்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குறிச்சி பகுதியில் தங்களுக்கு உணவிற்கு ஏற்பாடு செய்யும் படி கேட்டு 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள்  ஓன்று கூடி நின்றனர். ஓரே இடத்தில் கூட்டமாக கூடிய வடமாநில தொழிலாளர்களை எச்சரித்த  போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர். அவர்கள் சாப்பாடு ஏற்பாடு செய்ய வலியுறுத்திய நிலையில் , அவர்களை காவல் துறையினர் அங்கிருந்து விரட்டி அடித்தனர். பின்னர் வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் மூலம் போலீசார்  நடவடிக்கை எடுத்தனர்.இதனிடையே கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உணவுக்காக வடமாநில தொழிலாளர்கள் அவதிப்படுவது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அப்போது வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உணவு கிடைக்க வில்லை எனில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்  எனவும்  தெரிவித்தார். மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கு இருக்கும்  பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

;