tamilnadu

img

திருமணத்திற்கு அனுமதி மறுத்த பங்குத்தந்தை மீது புகார்

விருத்தாசலம் அருகே திருமணத்திற்கு  பங்குத்தந்தை அனுமதி வழங்க மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஆர்.சி.கோவிலங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தனராஜ் என்பவருக்கு கடந்த ஜூலை 14ம் தேதி பஞ்சாயத்தில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டது. உரிய காரணம் தெரிவிக்கப்படாததால் தன்ராஜ் கூட்டத்திற்கு செல்லவில்லை. இந்நிலையில் தன்ராஜ் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. திருமணத்திற்கு முதல்நாள் பங்குத்தந்தை அனுமதி கடிதம் வழங்காததால் தன்ராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தன்ராஜ் குடும்பத்தினர்  கிறிஸ்தவ மத முறைப்படி  ஏன் திருமணம் நடத்த முடியாதென்று பங்குத்தந்தையிடம் காரணம் விளக்கம் கேட்டுள்ளனர். இதற்கு  ஊர்  பஞ்சாயத்து தன்ராஜ் குடும்பத்தை ஒதுக்கி வைத்திருப்பதால் கிறிஸ்தவ முறைப்படி எந்த சடங்குகளையும் அவர்களுக்கு ஊர் திருச்சபை செய்து வைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் பங்குத்தந்தை மைக்கேல் துரைராஜ் கூறி உள்ளார். மணமகளின் தரப்பு பங்குத்தந்தை திருமணத்திற்கு அனுமதி கடிதம் தர மறுத்ததால் மணமகன் தரப்பு பங்குத்தந்தையும் திருமணத்தை நடத்தி வைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். 
இதையடுத்து இருவீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வித சடங்குகளுமின்றி தங்கள் மகள் திருமணத்தை முடித்துள்ளதாக தன்ராஜ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 
இதையடுத்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள தன்ராஜ் குடும்பத்தினர் ஊர் மக்கள் நிறைவேற்றியதாக கூறப்படும் தீர்மான நகல் அடிப்படையில்  உப்பளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
 

;