tamilnadu

img

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஈரோடு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான பின்னர்தான், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் 
கோபியில் அமைச்சர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்தான், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும். அதற்கு முன்னர் மாணவர் சேர்க்கையை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால், அப்பள்ளியின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், பிளஸ்- 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல மறுக்கின்றனர். எனவே, அங்கு திருத்த வேண்டிய விடைத்தாள் வேறு மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

;