education

img

பட்டதாரிகளுக்கு TNEB-ல் பணி 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 1300 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\

காலியிடங்கள்: 1300

சம்பள விகிதம்: ரூ.19,500 - ரூ.62,000

வயதுவரம்பு: 1.7.2019 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST/SCA/விதவைகளுக்கு 5 வருடங்களும், BC/MBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: கலை, அறிவியல், வணிகவியல், பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், அளவீட்டு கருவிமூலம் கணக்கீடு செய்யவும், மிதிவண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை
தகுதியானவர்கள் TANGEDCO-ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்த விபரங்கள் பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்
பொதுப்பிரிவினர்களுக்கு ரூ.1000. SC/SCA/ST/PWD மற்றும் விதவை பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி  நாள்: 10.2.2020.

;