education

img

மத்திய அரசு பணிக்கான SSC தேர்வு

மத்திய அரசின் கீழ் செயல்படும் Staff Selection Commission (SSC) 1,355 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தேர்வின் பெயர் : Staff Selection Commission (Phase- VIII/2020/Selection Posts)

மொத்த காலியிடங்கள் : 1,355.

சம்பள விகிதம்: 7 வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:  10ஆம் வகுப்பு/+2/பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 10.6.2020 முதல் 12.6.2020 வரை

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை மற்றும் மதுரை.

ஆன்லைன் எழுத்துத்தேர்விற்கான நுழைவுச் சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், அருந்ததியர், விதவை பிரிவினர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.3.2020. 

ஆன்லைன் எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

;