education

img

ராணுவ அதிகாரி பணிக்கான CDS தேர்வு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் “Combined Defence Services Examination (II) 2020” தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: லெப்டினன்ட்கா (Indian Military Academy)
காலியிடங்கள்: 100
வயதுவரம்பு: 2.1.1997-க்கும் 1.1.2002-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: லெப்டினன்ட் (Indian Naval Academy)
காலியிடங்கள்: 45
வயதுவரம்பு: 2.1.1997-க்கும் 1.1.2002-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இன்ஜினியரிங் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: லெப்டினன்ட்கா (Air Force Academy)
காலியிடங்கள்: 32
வயதுவரம்பு: 20 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Physics, Mathematics பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது BE/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: லெப்டினன்ட் (Officers’ Training Academy-SSC (Men))
காலியிடங்கள்: 225
வயதுவரம்பு: 2.1.1996-க்கும் 1.1.2002-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

5. பணியின் பெயர்: லெப்டினன்ட் (Officers’ Training Academy-SSC (Women))
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 2.1.1996-க்கும் 1.1.2002-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: Combined Defence Services Examination (I), 2020 தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

CDS தேர்வு நடைபெறும் நாள்: 2.2.2020.

விண்ணப்பக் கட்டணம்: UR/ OBC பிரிவினர்களுக்கு ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள்/ SC/ ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 19.11.2019.மேலும் வயதின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச உயரம், உடல் எடை மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும். 

;