internet

img

பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் நீக்கப்படும் - டிவிட்டர் அறிவிப்பு

பயன்பாட்டில் இல்லாத டிவிட்டர் கணக்குகளை நீக்க உள்ளதாக அந்நிறுவனம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் டிவிட்டர் நிறுவனம் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் தங்களது டிவிட்டர் கணக்கை 6 மாதங்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத பயனாளர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், இதுகுறித்த அறிவிப்புகளை பயனர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் என்றும், அதன் பின்னர்தான் நீக்கும் பணிகள் நடக்கும் என்றும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கணக்குகளை நீக்கும் பணியை செய்து முடிக்க பல மாதங்கள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டிவிட்டர் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “பயனாளர்களுக்கு கூடுதல் வசதிகளை டிவிட்டர் தளத்தில் செய்ய விரும்புகிறோம். அந்த வகையில் தற்போது இந்த சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக டிவிட்டர் புதிய கொள்கை வரைவுகளையும் தயார் செய்துள்ளது” என்றார்.

;