science

img

விண்வெளிக்கு ரோபோவை அனுப்பும் இஸ்ரோ!

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக, வயோம் மித்ரா என்ற ரோபோவை அனுப்பி சோதனை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

வரும் 2022 -ஆம் ஆண்டில், ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள 4 விமானப்படை வீரர்கள் ரஷ்யாவிலும், இந்தியாவிலும் பயிற்சி மேற்கொள்வார்கள். இவர்களின் உடல்நிலையை கண்காணிக்க உள்ள மருத்துவர்களுக்கு பிரான்ஸ் நாட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறது. விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கான உடைகளும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு இஸ்ரோவால் அறிமுகப்படுத்தப்பட்டது. ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்த உள்ள ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டும் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதற்கு முன்பாக, இஸ்ரோ தயாரித்துள்ள ஹுயுமனாய்டு வகை ரோபோவான வயோம் மித்ராவை விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் வயோம் மித்ராவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், வயோம் மித்ராவை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு ”ஹாய்” சொல்லி வரவேற்றது இந்த ரோபோ விண்வெளியில் வீரர்கள் செய்பனவற்றை அப்படியே செய்தும் காண்பிக்கிறது. வயோம் மித்ரா ரோபோவுக்கு கால்கள் இல்லை. மேலும், இதனால் பக்கவாட்டிலும் முன்பகுதியிலும் மட்டுமே குனிய முடியும். இந்த ரோபோ, சில ஆய்வுகளை செய்யும் என்றும், இஸ்ரோ உடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 

;