science

img

சந்திராயன் விண்கலம் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ 

சந்திராயன் விண்கலம் வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென்துருவ பகுதியை ஆராய சந்திரயன் 2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த திங்களன்று சந்திராயன் 2 விண்கலம் அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொங்கப்பட்ட நிலையில் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில் கவுண்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு கடைசி நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் வரும் ஜூலை 22ம் தேதி பகல் 2.43 மணியளவில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ இன்று அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 

;