politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி :- மக்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால் பொருளாதாரம் நன்றாக உள்ளது.
ச.சா - மக்கள்லாம் உயிரோட இருக்காங்க.. அதனால அமோகமா இருக்காங்கன்னு கூட சொல்வாங்களோ..??
*****
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- அமெரிக்க தொழில்முனைவோர் தமிழகத்தில் முதலீடு செய்ய வர வேண்டும்.
ச.சா - முதலமைச்சர் போய் கூப்புட்டப்ப வரலையோ..??
*****
பாஜக பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் :- சபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
ச.சா - பெண்களும் பக்தர்கள்தானே..??
*****
ஒடிசா மாநில அரசு கையேடு : - எதிர்பாராத காரணங்களால் காந்தி இறந்தார்.
ச.சா - அந்த மனுஷன எத்தன தடவதான் கொலை பண்ணுவாங்க..??

;