politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு பிரதமர் மோடி

கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் :- மக்களின் கோரிக்கைகள் 30 நாட்களில் தீர்க்கப்படும்.


ச.சா - 50 நாள்ல பணமதிப்பு இழப்போட பாதிப்ப சரி பண்ணுவோம்னு சொன்னவங்க நீங்கதான...??


இஸ்ரோ விஞ்ஞானிகள் :- மாதந்தோறும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவோம்.


ச.சா - இதையாவது நீங்க அறிவிச்சீங்களே...?!?!


மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் :- இறந்த ராணுவ வீரர்களை தியாகிகளாக அறிவிப்போம் என்று காங்கிரஸ் அறிவிக்கவில்லை.


ச.சா - இருக்குற துணை ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் தர்றது உங்க அறிவிப்புல இல்லையே..?!?

;