politics

img

நாடு இன்றிருக்கும் நிலை குறித்து கவிஞர் குல்சார் எழுதிய இரண்டு கஜல்கள்

 

விழித்திருங்கள், விழுத்திருங்கள், விழித்துக் கொண்டே இருங்கள்

விழித்திருங்கள், விழுத்திருங்கள், விழித்துக் கொண்டே இருங்கள்

தாக்குதல் நடத்துவதற்காக இரவுகள் தயார் செய்யப்படுகின்றன

சிலந்தியின் வலைகளைப் போலவே இந்த இருளும் சிலரால் கட்டப்படுகின்றன

விழித்திருங்கள், விழுத்திருங்கள், விழித்துக் கொண்டே இருங்கள்


நம்பிக்கைகள் நெருப்பின் நாக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளன

மனிதர்கள் நெருப்பின் நாக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்

பலத்த சுவாலைகளுடன் தீ எரியும் போது... எனக்கு அச்சமாக இருக்கிறது

மனிதர்களை அது தூண்டி விடும் போது... எனக்கு அச்சமாக இருக்கிறது

சிலரின் கால்களால் மனித இனம் நசுக்கப்படுகிறது

விழித்திருங்கள், விழுத்திருங்கள், விழித்துக் கொண்டே இருங்கள்


கழுத்துகள் மீண்டும் தொங்குகின்றன, தலைகள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன

மக்கள் பிரித்து வைக்கப்படுகிறார்கள், அவர்களுடைய தெய்வங்களும் கூட

எனது பெயரைக் கேட்டார்கள்... எனக்கு அச்சமாக இருக்கிறது

ஒருவர் எதனை வழிபடுகிறார்... எனக்கு அச்சமாக இருக்கிறது

பல முறை ஒரு சிலர் என்னைத் தூக்கில் தொங்க விடுகிறார்கள்

விழித்திருங்கள், விழுத்திருங்கள், விழித்துக் கொண்டே இருங்கள்


ஜெய்ஹிந்த் ஹிந்த், ஜெய்ஹிந்த் ஹிந்த்

ஜெய் ஹிந்த் ஹிண்ட், ஜெய் ஹிந்த் ஹிந்த்

எனது புனித வார்த்தை, என்னுடைய வரலாறு

எனது கலாச்சாரம், என்னுடைய நம்பிக்கை

எனது செயல்திட்டம், என்னுடைய தாய்நாடு

இந்த ஹிந்த், என்னுடைய இந்த ஹிந்துஸ்தான்

ஜெய் ஹிந்த் ஹிந்த் ...

இந்த நாட்டின் மீது விழும் சூரிய ஒளி அனைத்தும் என்னுடையது

அதுபோன்றே அனைத்து நிழல்களும். . . 

அனைத்து நதிகளில் உள்ள நீரும் என்னுடையது

அதுபோன்றே ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பசுமையும்

ஆனாலும் என்னுடைய பசியும் என்னுடைய வியாதியும்

என்னுடைய வேலையின்மையும் ஏன் இன்னும் என்னை விட்டு அகலவில்லை?

சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு வேளையும்

அது ஏன் மறைந்து போகிறது?

என் வானம் நிறைந்து போகும் போதெல்லாம்

யாரோ என்னுடைய மேகங்களை ஏன் திருடிச் செல்கிறார்கள்?

என்னுடைய பெருமையை, என்னுடைய மரபை

யாராவது எனக்குத் திரும்பத் தருவதென்றால்

இந்த ஹிந்த், என்னுடைய ஹிந்துஸ்தான்

ஜெய் ஹிந்த் ஹிந்த்...


- தமிழில்:முனைவர் தா.சந்திரகுரு, விருதுநகர்.

;