politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:-குழந்தைத்தொழிலாளர் இல்லாத தமிழகம்.
ச.சா - போற நிலைமையப் பாத்தா தமிழகத் தொழிலாளர் இல்லாத தமிழகம் தான் உருவாகும் போலருக்கே..??
_ _ _

மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி :- மதவாதம் என்ற நோய்க்கு மோடி தலைமையிலான அரசு முடிவு கட்டி விட்டது.
ச.சா - பிரக்ஞா மாதிரி பயங்கரவாத குற்றவாளிகளுக்கு பதவி கொடுத்ததால் இந்த நிலைமையா..??
_ _ _

செய்தி :- முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் தொழிலாளர் சட்டங்களை மாற்ற மத்திய அரசு முடிவு.
ச.சா - தேர்தல்ல பணம் கொழிக்க உதவுனவங்களுக்கு நன்றிக்கடனோ..??
_ _ _

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்:- அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு 50 சதவிகித வரியை ஏற்றுக் கொள்ள முடியாது.
ச.சா - 100 சதவிகிதத்துலருந்து 50 ஆகக் குறைச்சாலும் திருப்தியில்லையோ..??

;