வேலைவாய்ப்பு

img

யூஜிசி-நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

யூஜிசி-நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி மற்றும் ஜே.ஆர்.எஃப் பணிகளுக்கு தகுதி பெறுவதற்கு தேசிய அளவிலான யூஜிசி-நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடைபெறும். இந்நிலையில், 2019 டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலம், நேற்று புதன்கிழமை அக்டோபர் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ), நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காடைசி நாள் அக்டோபர் 15-ஆம் தேதி என்று அறிவித்துள்ளது. 
 

;