விளையாட்டு

img

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்

இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் சீனியர், உடல் நல குறைவால் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சீனியர், மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை லண்டனில் (1948), ஹெல்சிங்கி (1952) துணைக் கேப்டனாகவும், மெல்பெர்ன் (1956) கேப்டனாகவும் பெற்றார். அவருக்கு 1957-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1975-ஆம் ஆண்டில் இந்தியா உலகக் கோப்பை வென்ற அணியின் மேலாளராகவும் இருந்தார். 

கடந்த ஆண்டு ஜனவரியில், மூச்சுக்குழாய் நிமோனியா காரணமாக பல்பீர் சீனியர் மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்தார். இதை தொடர்ந்து, பல்பீர் சிங், கடந்த 12-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மொஹாலியில் உள்ள மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த நிலையில், 96 வயதான இவர் இன்று காலை 6.30 மணி அளவில் மொஹாலியின் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

;