விளையாட்டு

img

ரொனால்டோ ஹோட்டல் கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றமா? நிர்வாகம் மறுப்பு 

லிஸ்பன் 
புதிய ஆட்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் ஐரோப்பா கண்டத்தில் 2-வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.   

இந்நிலையில் கால்பந்து உலகின் தலைசிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சொந்தமான பேஸ்டனா சிஆர் 7 என்ற ஹோட்டல் அவரது சொந்த நாடான போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் உள்ளது. இந்த ஹோட்டலை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையாக ரொனால்டோ மாற்றிவிட்டதாக செய்திகள் வெளியானது. 

"இந்த செய்தி தவறானது எனவும், பேஸ்டனா  சிஆர் 7 ஹோட்டல் இனிமேலும் ஹோட்டலாக தான் இருக்கும்" என அந்த ஹோட்டலின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் பற்றி ரொனால்டோ ஏதும் கூறவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரொனால்டோ அவரது சொந்த ஊரான மடேய்ராவில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;