விளையாட்டு

img

உலக குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் மேரிகோம்

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 
ரஷ்யாவின் உலான் உடே பகுதியில்  உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஜூடாமஸ் ஜிட்போங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 
இந்நிலையில் இன்று நடந்த போட்டியில்  கொலம்பியா நாட்டின் சேர்ந்த இங்க்ரிட் வெலன்சியாவை 5 -0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.மேலும் பதக்கம் வெல்வதையும் உறுதி செய்துள்ளார். 
இது உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோமின் 8 வது பதக்கமாகும்
ஏற்கனவே இவர் 6 தங்கம் ஒரு வெள்ளி என 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில்  உலக குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கான தங்க பதக்கம் பெறுவேன் என மேரி கோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

;