விளையாட்டு

img

பிசிசிஐ துணைத்தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா

மும்பை 
கிரிக்கெட் உலகின் பணக்கார வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) துணை தலைவராக இருப்பவர் மஹிம் வர்மா. 

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் அம்மாநில கிரிக்கெட் நிர்வாக செயல்பாடுகளைக் கவனிக்கச் செல்வதால் எனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

இதுகுறித்து மஹிம் வர்மா கூறியதாவது,"தற்போது அபாய கட்டத்தில் சென்று கொண்டிருக்கும் எனது மாநில கிரிக்கெட் சங்கத்தின் (உத்தரகண்ட்) மீது கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் என்னுடைய ராஜினாமா கடிதத்தை சிஇஓ ராகுல் ஜோரிக்கு அனுப்பியுள்ளேன். என்னுடைய ராஜினாமா ஏற்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார். 

கிரிக்கெட் துறையில் பழுத்த அனுபவம் உடைய மஹிம் வர்மா திடீரென ராஜினாமா கடிதம் அளித்துள்ளதால் இந்திய கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சி அலை உருவாகியுள்ளது. 

;