திங்கள், ஆகஸ்ட் 3, 2020

விளையாட்டு

img

நடப்பாண்டில் சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகள் கிடையாது... சீன அரசு அறிவிப்பு...  

பெய்ஜிங் 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடப்பாண்டில் நடைபெறவிருக்கும் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பில்,"மகளிர் டென்னிஸின் ஆறு தொடர்கள், ஆடவர் பிரிவில் நடைபெறும் 4 தொடர்கள்  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்களுக்கான 4 சர்வதேச டென்னிஸ் தொடர்களையும், அக்டோபர் மாதம் நடைபெறும் ஆசிய விளையாட்டு கிளிம்பிங் சாம்பியன்ஷிப் மற்றும் இரண்டு சைக்கிள் ரேஸ் தொடர்களும், டிசம்பர் மாதம் நடைபெறும் பேட்மிண்டன் உலக டூர் பைனலும், நடப்பாண்டில் நடைபெறும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆறுதல் செய்தியாக 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

;