திங்கள், ஆகஸ்ட் 10, 2020

விளையாட்டு

img

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி புதுகை வீராங்கனைக்கு தங்கம்

புதுக்கோட்டை:
காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை அனுராதா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் சமோவ் தீவில்உள்ள அபியர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற பெண்களுக்கான 87 கிலோ எடைப்பிரிவில் புதுக்கோட்டையை சேர்ந்த வீராங்கனை அனுராதா ஸ்நாச் முறையில் 100 கிலோவும் கிளின் அண்ட் ஜெர்க் முறையில் 121  கிலோவும் என 221 எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். தங்கபதக்கம் வென்ற அனுராதா புதுக்கோட்டை நெம்மேலிப்பட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமிழக பயிற்சியாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் அனுராதா வென்றதன் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார். பளுதூக்கும் போட்டியில் தொடக்க காலத்தில் தமிழகத்தில் பயிற்சி பெற்ற அனுராதா, பின்னர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் சிறப்பு பயிற்சியை பெற்றார் என்றார்.

;