விளையாட்டு

img

அடுத்தாண்டு ஒலிம்பிக் தொடர் நடைபெறுமா?  ஜப்பான் பிரதமர் புதிய தகவல்

டோக்கியோ
விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவான ஒலிம்பிக் போட்டி தொடரின் 32-வது சீசன் வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுவதாக அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. இதற்கான முழு ஏற்பாடுகளை ஜப்பான் அரசு தயார் நிலையில் வைத்திருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதாவது 2021-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜப்பான் பிரதமர் டோக்கியோ ஒலிம்பிக் தொடர் பற்றி புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷின்சோ அபே கூறியதாவது," ஜப்பானில் அவசர நிலை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படாத வரை அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறாது" என அறிவித்துள்ளார்.   
 

;