விளையாட்டு

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் அரை இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடர அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மற்றும் அமெரிக்கா வீரர் டென்னிஸ் சாண்ட்ரென் மோதினர். ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3-ஆம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் 6-3 2-6 2-6 7-6(8) 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டென்னிஸ் சாண்ட்ரெனை வெளியேற்றி அரை இறுதிக்கு முன்னேறினார். 
 

;