விளையாட்டு

img

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 3-வது சுற்றில் ஜூவரேவ்

சீனாவின் முக்கிய நகரான ஷாங்காய் நகரில் ரோலக்ஸ் மாஸ்டர்ஸ் என்ற பெயரில் ஆடவருக்கான டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.  ஆடவா் ஒற்றையர் பிரிவில் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் அதிரடிக்குப் பெயர் பெற்ற ஜெர்மனியின் ஜுவரேவ், பிரான்ஸின் சார்டியை 7-6 (15-13), 7-6 (7-3) என்ற செட்  கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறி னார். மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் இளம்புயலான கிரீஸின்  டிஸிடிஸிபாஸ்  கனடாவின் ஆகரை 7-6(7-3), 7-6(7-3) என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.  இத்தாலியின் பெர்ரெட்டினி, ஸ்பெயி னின் பாடிஸ்டா, ரஷ்யாவின் காச்சானோவ், அமெரிக்காவின் இஸ்னர் ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

;