செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

விளையாட்டு

img

ஆண்டின் சிறந்த தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரராக டி காக் தேர்வு.... 

டர்பன் 
அதிரடிக்கு பெயர் பெற்ற கிரிக்கெட் அணியான தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் அசத்தலாக விளையாடும். உலக சாம்பியன் அணியாக இருந்தாலும் தென் அப்பிரிக்கா கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதாக இருந்தால் அந்த அணியை சற்று தயக்கத்துடன் தான் எதிர்கொள்ளும் 

இந்நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறப்பாக அசத்தும் வீரர்களுக்கு விருது வழங்கப்படுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்றால் நடப்பாண்டிற்கான கிரிக்கெட் விழா வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.  ஒயிட் பால் (ஒருநாள், டி-20) கிரிக்கெட் அணியின் கேப்டன் டி காக் ஒட்டுமொத்த விளையாட்டின் சிறந்த வீரராகவும், டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டில் லாரா வால்வார்த்ட் (21) சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த டி-20 கிரிக்கெட் வீரராக லுங்கி நிகிடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த அறிமுக வீரராக ஆண்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   

;