விளையாட்டு

img

ஊரடங்கில்  தவிக்கும் 5 ஆயிரம் குடும்பத்திற்கு ஹர்பஜன்சிங் உதவி

ஜலந்தர் 
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இதனால் தினக் கூலி தொழிலாளர்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் உலகின் சீனியர் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் ஜலந்தர் மாவட்ட பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்திற்கு உணவு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். அதை விரைவில் செயல்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி தினமும் 10,000 பேருக்கு உணவு வழங்குகிறார். இதே போல முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் ரூ. 50 லட்சம் நிதி உதவியை அளித்துள்ளார். இந்த வரிசையில் தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் "தமிழ்ப் புலவர்" என அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் நுழைந்துள்ளார்.  
 

;