விளையாட்டு

img

கொரோனா நிவாரண நிதி: விளையாட்டு வீரருக்கு சிபிஎம் பாராட்டு

புதுச்சேரி, ஏப்.19 - கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக அரசு விதித்துள்ள ஊரடங்கா பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிவாரண நிதி திரட்டி உதவி வருகிறது. இந்த நிவாரண நிதிக்காக, ஸ்கேட்டிங் வீரர்  யோகேஸ்வரன் தனக்கு கிடைத்த பரிசு தொகை யில் இருந்து 3 ஆயிரம் ரூபாயை வழங்கினார். புதுச்சேரி ஜிப்மர் கேம்பஸ் கேவி பள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் யோகேஸ்வ ரன் இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்து வருகிறார்.

யோகேஷின் தாயார் ரமாதேவி  ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். தந்தை ஆர்.ரவிச்சந்திரன் சிஐடியு  இணைச் செயலாளராகவும் அரசு விரைவுப் போக்குவரத்து தொழிலாளர் சங்க சிஐடியு  செய லாளராகவும் உள்ளார். நிவாரண பணிகளுக்கு நிதியுதவி செய்த யோகேஸ்வரனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

;