செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

விளையாட்டு

img

உலக குத்துச்சணடை போட்டி : புதிய சாதனை படைக்க போகும் மேரி கோம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற முதல் குத்து சண்டை வீராங்கனை என்ற சாதனையை மேரி கோம் படைக்கவுள்ளார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் அரையிறுதிக்கு முன்னேறிய மேரி கோம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். முன்னதாக 6 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கங்களை கையில் வைத்துள்ள மேரி கோம், இப்போட்டியின் மூலம் 8 வது பதக்கத்தை பெறவுள்ளார். இதன் மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற முதல் குத்து சண்டை வீராங்கனை என்ற சாதனை படைக்கவுள்ளார்.
 

;