செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

விளையாட்டு

img

உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசு

ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை இன்று பரிசுகளை வழங்கியது.

சமீபத்தில் ரஷ்யாவின் உலன் உடே நகரில் உலக குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த மஞ்சு ராணி, மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோர் பதக்கங்களை பெற்றனர். இந்நிலையில் இவர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜிவை இன்று சந்தித்தனர். இச்சந்திப்பில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வெள்ளி பதக்கம் வென்ற மஞ்சு ராணிக்கு 14 லட்சமும், வெண்கலம் வென்ற மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோருக்கு 8 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
 

;