விளையாட்டு

img

நாக் அவுட் சுற்றில் ஜமுனா

உலக மகளிர் குத்துச்சண்டை 

உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் அய்பா (AIBA) என்ற பெயரில் ரஷ்யாவின் முக்கிய நகரான உலான் உடேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 54 கிலோ எடை பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியா வின்  ஜமுனா போரோ, அல்ஜீரியாவின் ஒயிடாட்டை 5-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.  அசாம் ரைபிள் படை பிரிவில் பணியாற்றி வரும் ஜமுனா போரோ (அசாம்) நடப்பாண்டுக்கான இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடரில் (54 கிலோ) தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;