விளையாட்டு

img

உங்களுக்குத் தெரியுமா?

தற்போதைய விளையாட்டு உலகில் பேராசை மிக்க நாடு எதுவென்று கேட்டால் ஜப்பான் என்று அதிரடியாகக் கூறிவிடலாம். இதற்குக் காரணம் ஜப்பான் நாட்டில்   விளையாட்டு தொடர்பான ஆர்வம் உள்ள இளசுகள் தங்களுக்குச் சம்பந்தமில்லாத, புரியாத எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி அதில் பங்குபெறுவார்கள். அவ்வாறு பங்குபெறும் விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றியோ,  தோல்வியோ எதுவாக இருந்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சிரித்துக் கொண்டே மைதானத்திலிருந்து வெளியே வருவார்கள். ஆனால் நன்கு பழக்கப்பட்ட விளையாட்டில் ஜப்பான்காரர்கள் பரிசு பெறாமல் வெளியே போக மாட்டார்கள். பேட்மிண்டன், பேஸ் பால், சுமோ (குண்டு மல்யுத்தம்) போன்ற விளையாட்டு பிரிவுகள் ஜப்பான் நாடு ஆதிக்கம் செலுத்தும் துறையாகும்.தற்போது கிரிக்கெட் விளையாட்டில் ஜப்பான் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;