விளையாட்டு

img

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா - 2019

நியூஸிலாந்து - இலங்கை 
இடம் : கார்டிப் (வேல்ஸ்)
நேரம் : பிற்பகல் 3 மணி  

வெற்றி வாய்ப்பு : இலங்கை அணியை விட நியூஸிலாந்து அணி வலுவாக உள்ளது என்றாலும் வெற்றி, தோல்வியை எளிதாகக் கணிக்க முடியாது. ஏனென்றால் நியூஸிலாந்து அணி தொடக்கத்தில் ஆட்டம் நன்றாக அமைந்தால் இறுதி வரை சிறப்பாக விளையாடும். தொடக்கம் சறுக்கினால் அந்த அணி வீரர்கள் தோல்வியை ருசித்தது போலத் துவண்டு விடுவார்கள்.ஆனால் இலங்கை வீரர்கள் அப்படியல்ல தொடக்கம் சரிந்தாலும் சரி, எகிறினாலும் சரி ஒரே மன நிலையில் விளையாடுவார்கள். தோல்வியின் விளிம்பிலிருந்தாலும் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடுவார்கள். சொல்லப் போனால் இலங்கை அணி அபாயகரமான அணியாகும்.சற்று அசந்தால் பிழிந்தெடுத்துவிடுவார்கள். இருப்பினும் இரு அணிகளின் வெற்றி வாய்ப்பை கூட்டிக் கழித்துப் பார்த்தால் நியூஸிலாந்து அணிக்கு 60ரூ வெற்றி வாய்ப்பு உள்ளது.  

 

 

ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா 
இடம் : பிரிஸ்டல் 
நேரம் : மாலை 6 மணி  

வெற்றி வாய்ப்பு : கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய அணியை கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் அணி சமாளிப்பது சற்று சிரமமான காரியம் தான். இங்கிலாந்து ஆடுகளங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு  நன்கு பழக்கப்பட்டவை என்பதால் தன் சொந்த மண் போல நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஆப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தாலும் ரஷித் மற்றும் அதிரடி வீரர் சேஷாத் ஆகியோரை மட்டுமே நம்பியுள்ளது. இந்த இரண்டு பேர் மாயாஜாலம் ஏதேனும் நிகழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.இருப்பினும் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 85ரூ வாய்ப்பு உள்ளது. 

 

இன்னும் 3 நாட்களில்...

தென் ஆப்பிரிக்கா - இந்தியா

;