விளையாட்டு

img

மூத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி காலமானார்

இந்தியாவின் மூத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி, மும்பையில் இன்று காலமானார்.

பரோடாவில் பிறந்த ராய்ஜி, 1941-42 ஆண்டுகளில் பாம்பே அணிக்கும், 1944-45 மற்றும் 1949-50 ஆண்டுகளில் பரோடா அணிக்காகவும் விளையாடினார். இவர் மொத்தமாக 9 முதல்தரப் போட்டிகளில் ஆடிய வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியுள்ளார். மொத்தமாக 277 ரன்களையும், அதிகபட்ச ரன்களாக 68 எடுத்துள்ளார். பின்னர், எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர், ஆரம்பகால இந்திய கிரிக்கெட்டில் பல முக்கியமான படைப்புகளை படைத்துள்ளார்.

100 வயதான ராய்ஜி, உறக்கத்தில் இருக்கும்போது இன்று அதிகாலை 2 மணி அளவில்  காலமானார். தெற்கு மும்பையில் சந்தன்வாதி இடுகாட்டில் இவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது. 
 

;