விளையாட்டு

img

கிரிக்கெட் போட்டியின் போது உயிரிழந்த நடுவர்

பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது நடுவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி மைதானத்தில் நேற்று உள்ளூர் கிளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 52 வயதான நஷீம் ஷேக் நடுவராக பணியாற்றி வந்தார். அப்போது போட்டியின் நடுவே திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்துள்ளார். இந்நிலையில் உடனடியாக நடுவர் நஷீம் ஷேக்கிற்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்தவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

;