விளையாட்டு

img

இளம்பெண்ணுக்கு டுவிட்டர் குறுஞ்செய்தி சர்ச்சையில் சிக்கிய முகமது ஷமி

 இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பெண்கள் தொடர்பான விவகாரத்தில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளதாக அவரது மனைவி ஜஹான் கொல்கத்தா காவல்துறையில் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.  பரபரப்பான கட்டத்தில் உலகக்கோப்பை நடைபெற்று வரும் நிலையில், இளம்பெண் ஒருவருக்கு டுவிட்டரில் குறுஞ்செய்தி அனுப்பி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.  முகமது ஷமி டுவிட்டர் குறுஞ்செய்தி அனுப்பிய இளம்பெண் பெயர் சோபியா. சோபியா தனது டுவிட்டர் பதிவில்,” என்னை 1.4 மில்லியன் பேர் பின்பற்றி வருகின்றனர். ஒரு கிரிக்கெட் வீரர் மட்டும் ஏன் எனக்குத் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்” எனவும், அந்த பதிவின் கீழே முகமது ஷமியின் டுவிட்டர் கணக்கு முகப்பைப் பதிவிட்டுள்ளார். சோபியாவின் டுவிட் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த பிரச்சனை யால் தான் முகமது ஷமி நியூஸிலாந்து அணிக்கெதிரான அரை யிறுதி ஆட்டத்தில் பங்கேற்கவில்லையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;