விளையாட்டு

img

இன்று 2-வது டெஸ்ட் போட்டி

தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? 

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட்  தொடரில் விளையாடி வருகிறது.

3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிராவின் முக்கிய நகரான புனேவில் வியாழனன்று தொடங்குகிறது.    தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக்கும் முனை ப்பில் தென் ஆப்பிரிக்க அணியும் என இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டு வதால் புனே டெஸ்ட் போட்டி பரபரப்பாகத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை வருமா? 

புனே நகரில் கடந்த ஒருவாரமாக மந்தமான காலநிலை நிலவுகிறது. வெயில் அதிகம் இல்லாமல் வானம் மேகமூட்டத் துடன் காணப்படுகிறது. சில சமயங்களில் மதியம் 3 மணிக்கு மேல் பலத்த மழை பெய்கிறது. இதே காலநிலை அடுத்த ஒருவாரத்திற்கு நீடிக்கும் என்பதால் புனே டெஸ்ட் போட்டிக்கு மழை அதிக குடைச்சல் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

;