விளையாட்டு

img

ஆபாச வார்த்தைகளுடன் இனவெறி கோஷம் கலக்கத்தில் இங்கிலாந்து அரசு

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணி கள் மோதும் ஆஷஸ் தொடர் இங்கி லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில்   ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதா னத்தில் வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது.   இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஜோப்ரா ஆர்ச்சரின் மிரட்டலான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 மற்றும் 3-வது  டெஸ்ட் போட்டிகளில் கடுமையாகத் திணறி னர். முன்னாள் கேப்டன் ஸ்மித்திற்கு கழுத்தில் தழும்பை உருவாக்கியவரும் ஆர்ச்சர் என்ப தால், ஆஸ்திரேலிய நாட்டுப் பிரபல செய்தித் தாள் நிறுவனமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் ஆர்ச்சரின் (தாயகம் - மேற்கு இந்தியத் தீவுகள்) இனம், அவரது பிறந்த நாடு ஆகிய வற்றை ஆராய்ந்து செய்தி வெளியிட்டது.  சிட்னி மார்னிங் ஹெரால்ட்டின் செய்தியை அடிப்படையாகக் கொண்டு மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற 4-வது  டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஜோப்ரா ஆர்ச்சரை நோக்கி, “ஜோப்ரா உங்களுடைய பாஸ்போர்ட்டை காட்டுங்கள்” என்று கூச்சலிட்டனர். புகாரின் பேரில் மான்செஸ்டர் மைதான அதிகாரிகள் இனவெறி கோஷங்களைக் கக்கிய ஆஸ்திரேலிய ரசிகர்களை மைதானத்தி லிருந்து வெளியேற்றினர்.  மற்றொரு பகுதியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறிப் பாடலைப் பாடியுள்ளனர். இந்த பாடலை கேட்ட கறுப்பினத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் மைதானத்தை விட்டு வெளியேறியதாக இங்கிலாந்து நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  இந்நிலையில், இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு எழுதிய புகார் கடிதத்தில், “மான்செஸ்டர் மைதா னத்தில் நிகழ்ந்த இனவெறி கோஷத்தில் ஆபாச வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப் பட்டன. பெண்கள் பாலியல் கோஷங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். சிலர் வீரர்களை நோக்கி ஆபாச செய்கைகளைச் செய்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் உடனடியாக இங்கிலாந்து அரசின் பார்வைக்குச் சென்றுள்ளது. இன வெறி சம்பந்தமான விஷயத்தில் இங்கி லாந்து அரசு கடுமையான நடவடிக்கையை  எடுக்கும் என்ற சிறப்பு பெயரை பெற்றிரு ந்தாலும் ரசிகர் புகார் கடிதம் எழுதும் வரை இனவெறி விவகாரத்தில் இங்கிலாந்து அரசு பொறுத்திருப்பது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டு ஊடகங்கள் போர்க்கொடி 
ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்த கீழ்த்தரமான செயலை கண்டு குமுறிய இங்கிலாந்து  நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம். விளையாட்டிற்குள் இனவெறி செயலுக்கு இடமில்லை. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும்  இனவெறி தொடர்பான விதிமீறலுக்குப் புகாரளிக்கும் வகையில் திட்டம் கொண்டுவர வேண்டும். அப்படிச் செய்தால் தான் இங்கிலாந்து மண்ணில் கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியும்” எனக் கூறி உள்ளது.

;