விளையாட்டு

img

நியூஸிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்

இந்திய அணி திணறல்

நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் (நியூஸிலாந்து லெவன் அணிக்கெதிரான) விளையாடி வருகிறது. மூன்று நாள் கொண்ட இந்த பயிற்சி ஆட்டம் நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரான ஹாமில்டனில் உள்ள சீட்டோன் மைதானத்தில் வெள்ளி யன்று தொடங்கியது. டாஸ் வென்ற  இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஹனுமா விஹாரி (101 ரன்கள்), புஜாரா (93 ரன்கள்) ஆகிய இருவர் மட்டும் சிறப்பாக விளையாடினர்.  மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை  இலக்கத்தில் (ரஹானே மட்டும் 18  ரன்கள்) வெளியேற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78.5 ஓவர்களுக்கு 263 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. நியூஸி லாந்து அணி தரப்பில் ஸ்காட் குஜ்ஜெ லெய்ஜ்ன் மற்றும் இஷ் ஜோதி ஆகி யோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி னர். 2-வது நாள் ஆட்டம் சனியன்று அதி காலை 3:30 மணிக்குத் தொடங்குகிறது.

;