விளையாட்டு

img

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி : மயங்க் அகர்வால் சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் இந்திய அணி தற்போது 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களுக்கு என்கின்ற வலுவான நிலையில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரகானே விளையாடி வருகின்றனர்.
 

;