செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

விளையாட்டு

img

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் 70 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த இந்திய- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில், கேப்டன் விராட்கோலி (70 ரன்), ரோகித் சர்மா (71 ரன்கள்), லோகேஷ் ராகுல் (91 ரன்) ஆகிய 3 வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 3 பேட்ஸ்மேன்களும் 70 ரன்னுக்கு மேல் ஒரு இன்னிங்சில் எடுப்பது இதுவே முதல் நிகழ்வாகும். கோலியும், ரோகித்தும் அபாரமாக ஆடியதால் இருவரும் 20 ஒவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் சமநிலையில் உள்ளனர். கோலி 70 இன்னிங்சில் 2633 ரன்னும், ரோகித்சர்மா 96 இன்னிங்சில் 2633 ரன்னும் எடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 6-வது ரன்னை தொட்ட போது சொந்த மண்ணில் 1000 ரன் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை கோலி படைத்தார். இதற்கு முன்பு சர்வதேச அளவில் இரண்டு வீரர்கள் மட்டுமே 20 ஓவரில் சொந்த மண்ணில் 1000 ரன்னை எடுத்து உள்ளனர். நியூசிலாந்தை சேர்ந்த மார்ட்டின் குப்தில் 1430 ரன்னும், காலின் முன்ரே ஆயிரம் ரன்னும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;