விளையாட்டு

img

விரைவில் ஓய்வு? திசை மாறும் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகத் தயார் நிலையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் தவிர மற்ற பொழுதுபோக்கு செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.  நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில்  இந்திய அணி அரையிறுதியில்  வெளி யேறியது. கோப்பையை வெல்ல முடியாத  கடுப்பில் 2 மாத விருப்ப ஓய்வு அறிவித்து விட்டு மேற்கு இந்தியத் தீவுகளின்  சுற்றுப் பயணத்தில் பங்குகொள்ளாமல் தோனி ராணுவ பயிற்சிக்குச் சென்றார். ராணு வத்திற்குச் சென்ற தினத்திலிருந்து இன்று வரை தோனியின் ஓய்வு பற்றிய செய்தி தான் நாளுக்கு நாள் டிரெண்ட் ஆகி வருகிறது.   முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சார்பு வல்லுநர்கள் தோனியை  அணியிலிருந்து நீக்கக் கோரி தேர்வுக்குழுவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சிலர் ஓய்வு பெறுவது தோனியின் சொந்த முடிவு தலையிட வேண்டாம் என கூறி வருகின்றனர்.   ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத தோனி ஆடம்பர காரில் ஊர் சுற்றுவது, அகாடமியில் ரசிகர் போல ஜாலி யாக வலம் வருவது, கால்பந்து விளையாடு வது எனப் பொழுதுபோக்கில் அதிக ஈடு பாடு காட்டி வருகிறார். சொல்லப்போனால் கால்பந்து பக்கம் தான் தோனி பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டு வருகிறார். இதற்குச் சாட்சியாக மும்பையில் அறக்கட்டளை சார் பாக நடந்த கால்பந்து போட்டியில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸுடன் இணைந்து தோனியும் கால்பந்து விளையாடியுள்ளார்.  ஆனால் தனக்குப் பின்னால் காத்திருக்கும் அடுத்த தலைமுறைக்கான இளம் தூண்களின் கிரிக்கெட் வாழ்க்கை யைப் பற்றி சிந்திக்காத தோனி ஓய்வு விவகாரத்தில் மந்தமாகச் செயல்படுவது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரு கிறது. தோனியின் வாழ்க்கை எந்த திசையில் பயணித்தாலும் என்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுத் தான் ஆக வேண்டும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

;