விளையாட்டு

img

ரவி சாஸ்திரிக்கு ரூ.10 கோடி சம்பளம்?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள் கடந்தமாதம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பயிற்சி யாளர்களின் சம்பளம் விகிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.   தலைமை பயிற்சியாளராகத் தொடர விருக்கும் ரவிசாஸ்திரிக்கு ஆண்டு வருமான மாக ரூ. 9.5 கோடி முதல் ரூ. 10 கோடிக்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ரவிசாஸ்திரி இதற்கு முன் ரூ.8 கோடி சம்பளமாகப் பெற்ற நிலையில், 20 சதவீத சம்பளம் உயர்த்தப் பட்டுள்ளது.   இதே போல பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்,  பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகி யோருக்கு ரூ.3.5 கோடியும், பேட்டிங் பயிற்சி யாளராக நியமிக்கப்பட்ட விக்ரம் ரத்தோ ருக்கு ரூ. 2.5 கோடி முதல் ரூ. 3 கோடி வரை ஆண்டுக்குச் சம்பளமாக வழங்கப்படும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

;