விளையாட்டு

img

ஐசிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர்

பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நியூசிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றது குறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியதாவது:-

"100 ஓவர் முழுமையாக விளையாடிய பிறகு இரு அணிகளும் சமமான ரன்கள் பெற்றிருந்த போதும் நீங்கள் தோல்வி அடைந்தால் அது மிகமிக வெற்று உணர்வை அளிக்கும். ஆனால் அந்த விதிகள் விளையாட்டின் தொழில்நுட்பங்கள் ஆகும். இந்த விதிகளை எழுதியபோது உலகக்கோப்பை இறுதிப்போட்டி இதுபோன்று சமன் ஆகும் என்று நினைத்து அவர்கள் எழுதியிருக்க மாட்டார்கள். இந்த விதிகளை மறுபரிசீலனை செய்வார்கள் என்று நான் கண்டிப்பாக நம்புகிறேன். போட்டி முடிவுகளை பெற பல வழிமுறைகள் உள்ளன."

இவ்வாறு அவர் கூறினார்.
 

;