விளையாட்டு

img

இந்திய அணி முதலிடம் - ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டி

ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில் 120 புள்ளிகளுடன் இந்திய அணி முதலியிடம் பிடித்துள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் தொடரின் முதல் பதிப்பானது 2021-ஆம் ஆண்டு ஜீன் மாதம் வரை நடைபெறுகிறது.இத்தொடரின் தொடக்க ஆண்டிலே இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் இந்தியா 2-0 என்ற முறையில் அபாரமாக வென்றது.இதன் காரணமாக இந்திய அணி 120 புள்ளிகளை பெற்று  ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. இந்திய அணியை தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா  60 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளது.மேலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 32 புள்ளிகளுடன் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன.

இந்நிலையில் இத்தொடரில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.   

;