விளையாட்டு

img

தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியர்

உலகக்கோப்பை தொடரில் சொதப்பிய தென் ஆப்பிரிக்க அணிக்கு பேட்டிங் பயிற்சி யாளராக இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வீரரான அமோல் முஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக் கெட் அணி 3 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தி யாவிற்கு வருகிறது. வரும் 15ஆம்தேதி தொடங்கும் இந்த தொடரில் சாதிக்க தான் இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரரை பயிற்சியாளராக நியமித்துள் ளது. அமோல் முஜும்தார் இந்திய தொடருக்கு மட்டும் பயிற்சியாளரா? இல்லை தென் ஆப்பிரிக்கா அணிக் காக நிரந்தரமாக பணியாற்று வாரா என்பது மட்டும்  புதிராக உள்ளது.  ஆந்திரா, மும்பை, அசாம் ஆகிய அணிகளுக்காக  விளையாடியுள்ள   அமோல்  முஜும்தாருக்கு  சர்வதேச அனுபவம்  கிடையாது. ஆனால்  171 முதல்தர போட்டிகளில் விளையாடி 30  சதங்கள், 60 அரைசதங்களு டன் 11167 ரன்கள் குவித்துள் ளார். அவரது சராசரி 48.13 ஆகும். 113 ‘லிஸ்ட் ஏ’ போட்டிகளில் 3286 ரன்கள் சேர்த்துள்ளார்.

;