விளையாட்டு

img

இடியாப்ப சிக்கலில் இங்கிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து நாடு எளிதாக அரையிறுதிக்குச் செல்லும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.   அதாவது முதல் இரண்டு ஆட்டத்தில் பலமான தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்  அணியுடன் மோதி பார்ம்  பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டு, அடுத்த 3 ஆட்டங்களில் இரண்டாம் நிலை பலத்துடன் உள்ள வங்கதேசம், விண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணி களை எளிதாக வீழ்த்தி புள்ளிப்பட்டி யலில் கம்பீரமாக நிற்கத் திட்டம் வகுக்க ப்பட்டுள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து அணிகளிடம் வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் அரையிறுதியில் சிக்கலின்றி அமர்ந்து விடலாம் எனக் கணக்குப் போடப் பட்டுள்ளது. ஆனால் நடந்ததோ வேறு. முதல்  ஆட்டத்தில் வெற்றியோடு தென் ஆப்பிரி க்காவைச் சாய்த்த இங்கிலாந்து அணியை இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி புரட்டி எடுத்தது.  பாகிஸ்தானால் ஏற்பட்ட அவமா னத்தைத் தீர்த்துக்கொள்ள வங்க தேசம், விண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகளைப் பந்தாடி முன்பே உரு வாக்கப்பட்ட திட்டத்துடன் புள்ளி பட்டியலில் வலுவாக நின்றது. ஏற் கெனவே ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள தால் இலங்கையை அசால்ட்டாக நினைத்து இங்கிலாந்து அணி கள மிறங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கி லாந்து அணி வலுவான வெற்றியைப் பெறும் எனக் கருத்துக்கணிப்புகளும் கூறின. ஆனால் இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னேவின் அசத்தலான வியூ கத்தைக் கனவிலும் எதிர்பார்க்காத இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை மறக்கும் அளவிற்கு இலங்கை அணியிடம் அடி வாங்கியது. இலங்கை அணியிடம் ஏற்பட்ட தோல்வி இங்கிலாந்து அணி பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது.  கடைசி மூன்று ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸி லாந்து ஆகிய பலமான அணிகளை இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது. நியூஸிலாந்து அணியை கூட இங்கி லாந்து அணி சரிக்கட்டிவிடும். ஆனால் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளை வீழ்த்துவது சிரமமான காரியம். இந்த இரு அணிகளும் சூழ்நிலைக்கு ஏற்ப  முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப் படுத்தும் என்பதால் இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பிற்கு வங்கதேசம், பாகிஸ்தான் அணி களின் வெற்றி, தோல்வியை எதிர்பார்க்க  வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.    முதன்முறையாகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கி லாந்து அணிக்கு இப்படி ஒரு நிலைமை  உருவாகும் என கிரிக்கெட் உலகமே எதிர் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

;