விளையாட்டு

img

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய இடைக்கால தடை

இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி வரதட்சணை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் வழக்கிற்கு முறையாக ஆஜராகாத ஷமியை கைது செய்ய அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து முகமது ஷமியின் தரப்பிலிருந்து எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகமது ஷமியை கைது செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.அடுத்த விசாரணை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது. 
 

;