விளையாட்டு

img

இந்தியாவில் இருந்து திரும்பிய தென்.ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள்  கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டது.  கடந்த 12-ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தின் தர்மசலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் 2-வது போட்டி லக்னோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா -  தென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா வீரர்கள், சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள்.

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இன்று காலை தங்கள் நாட்டுக்கு சென்றடைந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

;