விளையாட்டு

img

கொரோனா வைரஸ் எதிரொலி பிஎஸ்எல் தொடர் ரத்து

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரைப் போன்று பாகிஸ்தான் நாட்டில் பிஎஸ்எல் (பாகி ஸ்தான் பிரீமியர் லீக்) என்ற பெயரில் டி-20 தொடர் நடைபெற்று வந்தது.  இந்த தொடரின் நடப்பாண்டுக்கான சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிஎஸ்எல் தொடர் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

போராட்டம் வீண் 

பிஎஸ்எல் தொடரை நிறைவு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  பல்வேறு வகையில் போராடியது. அதாவது பிளே ஆப் ஒற்றை அரையிறுதி ஆட்டங்களாக மாற்றி, கடைசி 2 லீக் ஆட்டங்களை மூடிய மைதானத்துக்குள் நடத்தியது. இதே போல ரசிகர்கள் இல்லாமல் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் சிக்கல் இல்லாமல் நடைபெறும் என திங்களன்று அறி வித்தது. இதற்காக கடும் போராட்ட த்தை சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அரசிடம் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தும் பலனில்லை. இறுதியில் அரசின் உத்தரவுக்கு கீழ்படிந்து பிஎஸ்எல் தொடரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
 

;