விளையாட்டு

img

பெலகாவி அணி சஸ்பெண்ட்

கர்நாடக பிரீமியர் லீக் சூதாட்டம் 

கேபிஎல் என்ற பெயரில் நடை பெற்று வரும் கர்நாடக பிரீமியர் லீக் டி-20 தொடர் 2009-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. இந்த கேபிஎல் தொடரின் 8-வது சீசனில் சூதாட்டம் நடந்ததாகக் கூறி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணையில் குதித்தது. விசாரணையின் முடிவில் நிஷாந்த் சிங், கெளதம், அப்ரார் கஸி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், கேபிஎல் தொடரில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற  பெலாகவி பாந்தர்ஸ் அணியைக் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சஸ்பெண்டு செய்துள்ளது. அந்த அணியின் உரிமையாளர் அலிப் அஷ்பாக் தாரா ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தார். அதனைக் காரண பொருளாக வைத்து பெலாகவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கர்நாடக கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.   மேலும் கேபிஎல் தொடரில் எந்த ஒரு அணியின் உரிமையாளரோ, நிர்வாகிகளோ யாரேனும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அந்த அணி நீக்கம் செய்யப்படும் என்று கர்நாடக கிரிக்கெட் சங்கம் எச்சரித்துள்ளது.
 

;