விளையாட்டு

img

தில்லி அணியில் அஸ்வின்?

ஐபிஎல் 
 

கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய உள்ளூர் டி-20 தொட ரான ஐபிஎல் தொடரில் பஞ்சாப்  அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் தில்லி அணிக்கு இடம்பெயருகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  2018 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்த பஞ்சாப் அணி திடீரென அஸ்வினை தக்கவைத்துக்கொள்ள மறப்பதற்கான காரணங்கள்  என்னவென்று தெரியவில்லை. எனினும் பஞ்சாப் அணியில் அதிரடி பாணியில் பல்வேறு சீர்திருத்தம் செய்துள்ளதால் அஸ்வினை கழற்றி விடப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மாற்றங்கள்

பஞ்சாப் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான அனில்  கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். சுனில் ஜோஷி துணை பயிற்சி யாளராகவும், ஜான்டி ரோட்ஸ் பீல்டிங் பயிற்சியாளராகவும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  இவர்கள் அனைவரும் ஆளுமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள். அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தில்லி அணி மாறு பட்ட பாதையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;